பல்லவி
குதூகலம் நிறைந்த நன்னாள்
நடு வானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்.
1
தளர்ந்த கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புதுப் பெலனடைந்து
ஜெய கீதங்கள் பாடிடுவோம்.
2
புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய் சேர்த்திடவே.
3
ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூய அலங்காரமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம்.
4
ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர் தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம்.
5
தேவதூதர்கள் கானமுடன்
ஆரவாரத் தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்.