பல்லவி
எந்தன் பூமானைக் காண சிந்தை பெருகுதய்யோ!
என்றைக்குக் காண்பேனோ! ஓ! ஓ!
1
சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் எந்தன்
பூமானைக் காண
அழகுடைய அண்ணல் இயேசுவைக் காண.
2
விண்ணிலிருந்தவர் மண்ணின்மேல் வந்தவர் கன்னிகையில்
பிறந்தவர்
லாசருக்காகக் கண்ணீர் விட்டவர்.
3
இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன
வாக்கை நினைத்து
அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன்.
4
பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன் என்ன
துயரடைந்தார்
அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை.
5
கன்னத்தில் அடிபட்டு கண்ணீர் விடும் வேளை என்னை
நினைத்தீரே நீர்
அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ? நான்.