அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 109

எக்காள சத்தம் வானில்

பல்லவி

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

என் இயேசு மா இராஜனே வந்திடுவார்.

1

அந்த நாள் மிக சமீபமே

சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே

தேவ எக்காளம் வானில் முழங்க

தேவாதி தேவனைச் சந்திப்போமே.

2

வானமும் பூமியும் மாறிடினும்

வல்லவர் வாக்குதாம் மாறிடாதே

தேவதூதர் பாடல் தொனிக்க

தேவன் அவரையே தரிசிப்போமே.

3

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்

விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்

கண்ணீர்க் கவலை அங்கே இல்லை

கர்த்தர் தாமே வெளிச்சமாவார்.

4

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்

கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்

பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்

பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்.

5

கள்ளர்கள் பரவி அங்குமிங்கும்

கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகின்றார்

கர்த்தரே வாரும் வாஞ்சையைத் தீரும்

கருத்துடன் நாம் விழித்திருப்போம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு