அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 10

ஐயனே! உமது திருவடி

1

ஐயனே! உமது திருவடி களுக்கே

ஆயிரந்தரம் தோத்திரம்!

மெய்யனே! உமது தயவினை அடியேன்

விவரிக்க எம்மாத்திரம்!

2

சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்

சேர்த்தரவணைத்தீரே;

அந்தையவாய்ப் பகலிலுங் கிருபை

யாகவா தரிப்பீரே.

3

இருதயந்தனை நீர் புதியதே யாக்கும்!

ஏழையைக் குணமாக்கும்!

கருணையாய் என்னை யுயதமாக்கிக்

கண்மலமெல்லாம் போக்கும்!

4

நாவிழி செவியை! நாதனே! இந்த

நாளெல்லாம் நீர் காரும்!

தீவினை விலக நான் திருமுகம் நோக்க

தெய்வமே, அருள் கூரும்!

5

கைகாலால் நான் பாவம் புரியாமல்

கர்த்தனே துணை நில்லும்!

தூய்யனே உம்மால் தான் எனதிதயம்

தூயவழியே செல்லும்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு