அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 108

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?

பல்லவி

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?

1

பூவில் இயேசு வரும்போது பொல்லாரோடிடுவார்

அந்தவிதம் நீ இருந்தால் என்ன செய்திடுவாய்?

2

மேகங்களுடன் வருவேனென்று சொன்னவர்

இப்போ மேகந்தனில் வரும் நேரம் கிட்டிச் சேருதே.

3

தேவதூதரோடும் பெரும் எக்காளத்தோடும்

தம் பக்தரைச் சந்திக்கும் நேரம் கிட்டிச் சேருதே.

4

அவபக்தர் அக்காலத்தில் அழுதிடுவார்

அவர் வரும்போது ரட்சிப்படைய மாட்டார்.

5

பாவங்களில் ஜீவிப்பவர் பதுங்கிடுவார்

பரிசுத்தமாக்கப்பட்டோர் பறந்திடுவார்.

6

இரக்கமுள்ள இந்த நாளில் மனந்திரும்பு

இந்நிமிஷம் ஏற்றுக்கொள்ளும் மன்னிப்புப் பெறு.

7

உனக்காய் மரித்த இயேசு காத்து நிற்கிறார்

இயேசு உன்னைப் பட்சமாக ஏற்றுக்கொள்ளுவார்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு