அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 107

இனித் தாமதமோ நாதா நீர் வரவே

பல்லவி

இனித் தாமதமோ நாதா நீர் வரவே

கோடா கோடி தூதர் சங்கமாய் மேகத்தில்

ஆஹா! எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும்

என் ஆத்ம நாதா உம் முகம் காணவே.

1

நிலையில்லா உலகில் பல துன்பங்கள் – ஹா!

பெரும் அலைகள் போல் புரள்கின்றதே

பார் உலகிதிலே பெருகிடுதய்யோ

பரிதாபமாய் மன சஞ்சலங்கள்

வந்து சேர்ந்துகொள்ளும் என்னை நீர் வேகமாய்

இன்றும் நோக்குகிறேன் உம்மை நான் ஏகனாய்.

2

வாழ்கிறார் மனுஷர் நம்பிக்கையற்றே

இளைப்புள்ளோராய் இப்பாருலகில்

வியாகுல சிந்தை பெருகுவதாலே

நிர்ப்பந்தராய்க் கண்ணீர் விடுகிறாரே

பூவியில் அந்தகாரம் மூடுதென் நாதனே

அந்தோ சிந்திக்கையில் என்ன பரிதாபமே.

3

ஆதி விசுவாசம் தள்ளியவர்கள்

லோக சுகங்களைத் தேடுகிறார்

தியாகிகளான சகோதரர் கூட்டம்

பதவிகள் தேடி அலைகின்றாரே

ஐயோ! விசுவாச ஜீவியம் நஷ்டமாய்

என் இளைப்பாறல் இன்றும் என்றும் உம்மிலே.

4

நீதியின் சூர்யா இயேசு மகேசா

உதித்திட காலமாகிடுமோ

உமது மகிமை நான் அணிந்திடவே

பொங்குதென்னுள்ளம் அனுதினமும்

தேவா காரிருள் முற்றுமே மாற்றியே

மாரி மின்னல் ஒளி இன்றுமே வீசவே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு