1
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்.
2
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன்.
3
தூதர்கள் வீணைகளை மீட்கும்போது
நிறைவான ஜெயகோஷம் முழங்கும்போது
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்.