பல்லவி
இராஜாதி இராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே.
அனுபல்லவி
நம் இயேசு ராஜா வருவார், எந்தன்
சுத்தரைச் சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்.
1
முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வெண்ணங்கி தரித்தவராய்
ஜெயக்கொடிகள் பிடித்திடுவார் மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது.
2
தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத
மேலோக ஆட்சி இது
துக்கம் நோயும் அங்கில்லையே பசிதாகமும் அங்கே இல்லை
பெரும் அல்லேலூயா முழக்கமே.
3
விருந்தாகும் இந்த ஆராதனையை
தந்துமே மகிழச் செய்தார்
மத்திய வானத்தில் ஓர் விருந்து சிறப்பாகவே ஒதுக்கிடுவார்
மீட்கப்பட்டோர் மட்டும் அருந்த.
4
என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம்
மீட்பின் சந்தோஷம் இது
சஞ்சலம் தவிப்பும் இல்லையே நித்திய மகிழ்ச்சி
நம் தலைமேலே
இயேசு இரத்தத்தின் புண்ணியம் இது.
5
நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நம்
கண்ணால் அவரைக் காண்போம்
நாம் தூசிகள் உதறியே தூய்மையை அணிந்திடுவோம்
நம் தூய தேவனைக் காண.
6
பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கும்
காலம் இதுவே தானே
நீதிமானே நீதி செய்வாய் பலனோடு நான் வாரேன் என்றார்
ஆமென் இயேசுவே வாரும் ஐயா.