1
இயேசு ராஜன் வருவார் தூதரோடும் வருவார்
பக்தரை வானத்தில் சேர்த்திடவே – நான்
ஜோதியாய் அவர் முகம் கண்டிடுவேன் – பின்னும்
ஜெய கெம்பீரங் கொண்டுள்ளம் பொங்கிடுமே.
2
மணவாளனோடு மணவாட்டியாம் சபை
மங்களமாய்க் கவி சாற்றிடுமே – அப்போ
மாட்சிமையோடு நாம் பாடிடுவோம் – அவர்
நேசத்தின் ஆழத்தை ருசித்திடுவோம்.
3
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளையங்கி தரித்து
கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவார் – அதில்
சேர்ந்திடுவேன் நானும் பாடிடுவேன் – அன்று
பொற் கிரீடம் தரித்தாடிடுவேன்.
4
காதலித்தேன் நான், காசினியிலின்பம் விட்டு
கர்த்தரோடென்று உறவாடிட – அங்கு
கனக மணவறை ஜொலித்திடுமே – அப்போ
கர்த்தராம் இயேசுவில் சுகிப்போமே.