அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 103

இயேசு சீக்கிரம் வரப்போகிறார்

1

இயேசு சீக்கிரம் வரப்போகிறார்

மாசில்லாதோர் ஆகாயத்தில் மறைந்தே போவார்.

2

கிரியைகளுக்கோ கிரீடங்களே

மரியின் மைந்தனுக்கோ மகுடமாமே.

3

அடக்கமாய் ஓடினோர்க்கழியாக் கிரீடம்

ஜீவனைக் கொடுத்தவர்க்கு ஜீவ கிரீடம்.

4

ஆத்துமா தாயம் செய்தோர்க்கு ஆனந்தக் கிரீடம்

மந்தை மேய்த்தவர்களுக்கோ மகிமைக் கிரீடம்.

5

பிரசன்னத்தை வாஞ்சிப்போர்க்கு நீதியின் கிரீடம்

பின்னால் விடப்படுவோர்க்கு நித்திய தண்டனை.

6

அன்று போன இயேசு இன்று வந்தாலோ

நன்று என்று ஒன்றுமின்றி என்றேகுவாயே.

7

அவரை ரட்சகராய் ஏற்றுக்கொண்டாலோ

அல்லேலூயா பாடிக்கொண்டே ஏகிடுவாயே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு