பல்லவி
ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே.
1
இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும்.
2
கர்த்தாவே நீர் எந்தன் காருண்யக் கோட்டையே
காரணமின்றிக் கலங்கேனே யான்
விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே.
3
என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது?
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்.
4
கூடாரவாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையல்லாத வீடொன்றை மேலே தான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ?
5
துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார்.
6
இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குறேனே
என் நேசர் தன்முக ஜோதியே அல்லாமல்
இன்பந்தரும் பொருள் ஏதுமில்லை.