வாழ்வது நானல்ல - 3
என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்
இறைவன் என்னில் உறைகின்றார் - 2
இன்பம் எனக்கு தருகின்றார்
அன்பும் அருளும் பொழிகின்றார் ஆ... ஆ... - 2
என்னை முழுதும் ஆள்கின்றார்
உயிரும் உடலும் போலவே
மலரும் மணமும் போலவே - 2
யாழும் இசையும் போலவே ஆ... ஆ... - 2
வாழும் இறையில் ஒன்றிப்போம்
கிறிஸ்து நம்மில் வளரவே
நாமும் தேய்ந்து மறையவே
கிறிஸ்து நம்மில் வாழவே ஆ... ஆ... - 2
நமக்கு பயமே இல்லையே