துதிப் பாடல்கள்

துதிக்கு பிரசித்தமே இயேசு ஏன்னும் நாமமே

Thudhikku Pirasithamae Yesu Ennum Naamamae

Tamil Christian song lyrics: துதிக்கு பிரசித்தமே இயேசு ஏன்னும் நாமமே (Thudhikku Pirasithamae Yesu Ennum Naamamae). பாடல் வரிகள். More songs: த

துதிக்கு பிரசித்தமே இயேசு என்னும் நாமமே

தூயோனே உம் கிருபை எங்களின் நல்சிலாக்கியமே

விசித்திர கிரியை செய்வோனே முழு உலகம் எங்கும்

ஈர்ப்பின் துருவம் நீர்தானே உம்மை பாடி போற்ற

ராஜாதி ராஜனாக கர்த்தாதி கர்த்தனாக

ஒருவராய் அதிசயங்கள் செய்வோனே

வானங்களை ஞானமாக படைத்தோனே

தண்ணீருக்கு மேலாக பூமியை பரப்புனீரே

பெரிய சுடர்களையும் உண்டாகி மகிழ்ந்தீரே

மாம்சமான அனைத்திற்கும் ஆகாரம் கொடுப்பீரே

மகிபனே மெய்க்கீர்த்தியே உம் கிருபை என்றுமுள்ளதே

தேவாதி தேவனாக இரட்சிப்பின் வேந்தனாக

எங்களின் நடுவில் உயர்ந்து நிற்போனே

தலைமுறை தலைமுறையாக வருபவரே

அனாதையாய் அலைந்த என்னை ஆற்றியே தேற்றினீரே

அழுகையின் பள்ளத்தாக்கை நீரூற்றாய் மாற்றினீரே

அழைத்த மெய் அழைப்பினாலே இதுவரை நடத்தினீரே

தாழ்விலே நினைத்தீரே உம் கிருபை என்றுமுள்ளதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு