சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கின்றீர்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்
தேவனே நீர் என்னை காண்கிறீர்
மறப்பேனோ உம் கிரியைகளை - 2
எனக்கு எதிராய் எழும்புகின்ற
வில்லையை நீர் ஒடித்தீர்
தாக்க நினைக்கின்ற எல்ல வகையின்
ஈட்டியை நீர் முறித்தீர்- 2
இரதங்களையோ அக்கினியால்
வேகமாய் நீர் சுட்டெரித்தீர்- 2
நன்றி நன்றி- 2 நல்லவரே என் வல்லவரே
நன்றி நன்றி - 2 வாழ வைத்த தீபமே நீர்
உருவாக்கிய தெய்வமே நீர்
சேனைகளின் கர்த்தர் எனக்கு தேவையான
எல்லாவற்றையும் தருகிறீர்
யேகோவா தேவன் எனக்கு ஒரு நாள்
இராஜகீரிடம் சூட்டிடுவீர்- 2
ஜாதிகளில் உயர்ந்திருப்பீர்
பூமியிலே நீர் உன்னதரே- 2
அல்லேலுயா கர்த்தரை துதியுங்கள்
வல்லவர் அவர் நல்லவர்
அவரை பாடி கீர்த்தனம் பண்ணி
அதிசயங்களெல்லாம் தியானிப்போம்- 2
கர்த்தரை போல் ஒருவர் இல்ல இந்த
உலக முழுவதையும் கலக்கிடவே- 2
இயேசுவே உம் வார்த்தையை கேட்க
பாதமமர்ந்து காத்திருப்பேன்
தேசத்தில் நடக்கும் கொடுமைகளெல்லாம்
சரியானவைகளாய் மாற்றிடுவீர்- 2
இயற்கையோ பேரழிவோ எதுவானாலும்
என்னை அசைப்பதில்லை – 2