துதிப் பாடல்கள்

ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே

Jaadhi Paarkkum Kiristhavanae

Tamil Christian song lyrics: ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே (Jaadhi Paarkkum Kiristhavanae). பாடல் வரிகள். More songs: ஜ

ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே

நீ கிறிஸ்தவன் என்று சொல்வது நியாயமா

ஜாதி பேயை காலின் கீழ்

மிதித்தவன்தான் உயிருள்ள கிறிஸ்தவன்

யூதன் என்றும் இல்லை

கிரேக்கன் என்றும் இல்லை

மேல்ஜாதி என்றும் இல்லை

கீழ்ஜாதி என்றும் இல்லை

ஆரியன் என்றும் இல்லை

திராவிடன் என்றும் இல்லை

இந்தியன் என்றும் இல்லை

அந்நியன் என்றும் இல்லை

எல்லா மனிதரும் இயேசு கிறிஸ்துவில்

ஒரு தாய் மக்கள்தான்

ஆசரிப்பு கூடாரத்தின்

details முழுவதும் படுத்துவிட்டேன்

வெளிப்படுத்தல் கானான் பயணம்

Bible study யும் முடித்துவிட்டோம்

கல்யாணத்தில் ஜாதி பிசாசு ஆடுதே

மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக தேவையா

இயேசு உலகத்தில் வந்தாரே

ஒன்றாய் இருக்கச் சொன்னாரே

இயேசுவின் சீடரின்அடையாளம்

அன்பாயிருப்பது தான் அன்றோ

ஒன்றாக இணைந்து இயேசுவின்

உடலில் இணைந்திருப்போம்

ஒன்றே குலம் என்று உரத்த குரலில்

முழங்கிடுவோம்

சமாரியர் என்னும் மக்களிடம்

யூதர் சம்பந்தம் கலப்பதில்லை

இயேசுகிறிஸ்து அங்கே சென்று

தண்ணீர் வாங்கி குடித்தாரே

ஜாதி பேயின் தலையை காலால் மிதித்தாரே

பிரிவினை சுவரை தகர்த்து

மனிதனை இணைத்தாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு