இறைவன் எழுந்து விட்டால்
நெஞ்சத்தில் நினைவலைகள்
உறவென்னும் மகிழ்வோடு
பாடுமே புதுராகம் - 2 ஆ...
கல்மனம் கரைந்தோடும்
தேன் இசை கீதங்களும்
தென்றலில் தவழ்ந்து வர- 2
ஏழிசைப் பாட்டெடுத்து
இயேசுவை வரவேற்போம்
வரும் வரை காத்திருப்போம் - 2
இருள் என்ற திரையுமில்லை
பகை என்ற சொல்லுமில்லை - 2
அன்பென்னும் மொழி பேசி
ஓர் குலமாய் வாழ்வோம்
ஒரு வழி நாம் செல்லுவோம் - 2