துதிப் பாடல்கள்

இராஜாதி இயேசு ராஜா

Iraajaadhi Yesu Raajaa

Tamil Christian song lyrics: இராஜாதி இயேசு ராஜா (Iraajaadhi Yesu Raajaa). பாடல் வரிகள். More songs: இ

இராஜாதி இயேசு ராஜா

இணையில்லா இயேசு ராஜா

இயேசுவோடு என்றென்றும் வாழ

இதயமெல்லாம் தினம் ஏங்குதே

தினம்தோறும் தேடி பாடிட என் மனம்

அவரிடம் வந்திடுதே

பெலப்படுத்திடும் கிறிஸ்துவினாலே

எதையும் செய்ய பெலனுண்டு - எனக்குண்டு

ஜெயங்கொடுத்திடும் கிறிஸ்துவினாலே

எதிலும் ஜெயம் எனக்குண்டு - எனக்குண்டு

எனக்குள்ளே அவர் வாழ்வதினாலே

எதற்கும் பயம் இனி இல்லையே

எனக்காக யாவையும் செய்து முடிப்பாரே

எல்லாமே பார்த்துக் கொள்வார் - அவர் (2)

போகும் இடமே எதுவானாலும்

கூட அவர் வருவாரே - வருவாரே

கால்கள் சறுக்கி விழுந்து விடாமல்

தோளில் சுமந்திடுவாரே - சுமப்பாரே

என்னைவிட்டு விலகுவதில்லை

என்னையே கை விடுவதுமில்லை

பலவீனம் நீங்கியே கலக்கங்கள் நீங்கியே

பலங்கொண்டு திடமானேன் - நான் (2)

கர்த்தர் எனக்கு செய்திட்ட உதவி

கணக்கிலே அடங்காது - அடங்காது

என்ன ஈடாய் செய்திடுவேனோ

எதுவும் இணையாகாது - ஆகாது

இரட்சிப்பின் பாத்திரம் கையில் எந்தி

இரட்கரை துதி பாடுவேன்

சந்தோஷம் என்னிலே தானாக பொங்குதே

அவரோடு மகிழ்ந்திருப்பேன் - நான் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு