துதிப் பாடல்கள்

இராஜாதி இயேசு ராஜாவே

Iraajaadhi Yesu Raajaavae

இராஜாதி இயேசு ராஜாவே

சகல வானங்களில் சர்வ பூமியில்

நீரே ராஜனே

பரலோக ராஜாவே இந்த பூமியின் ராஜாவே

விண்ணுலக ராஜாவே இந்த மண்ணுலக ராஜாவே

சகல ஜனங்களுக்கெல்லாம்

ஒரே ராஜா நீரே

மகிமையின் ராஜா மகத்துவ ராஜாவே

சாலேமின் ராஜாவே சர்வவல்ல ராஜாவே

ஜெய கெம்பீரமான

மகா ராஜாவே

நீதியும் நேர்மையுமாய் ஆளுகை செய்கிறீர்

உண்மையும் உத்தமுமாய் நியாயம் செய்கிறீர்

சத்தியம் காக்கும் ராஜா

சத்திய தேவன் நீரே

உலகத்தின் ராஜாக்கள் நிரந்தரம் இல்லையே

நீர் ஒருவரே இயேசுவே நிரந்தர ராஜாவே

உமது சிங்காசனம்

அசைக்க முடியாதே

ராஜாவை போற்றுகிறோம் ஆராதனை செய்கிறோம்

வாழ்த்தி வணங்குகிறோம் உயர்த்தி மகிழ்கிறோம்

வாழ்க வாழ்க வாழ்க - இயேசு

ராஜா நாமம் வாழ்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு