அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
அன்பர் இயேசுவே உமக்கு ஆரதனை
நித்தம் நடத்தி நிரந்தரமாய்
என்னை ஏற்றுக்கொண்டீர் ஆராதனை - 2
யேகோவா தேவா என் ராஜனே
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் - 2
சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவரே
உமக்கே ஆராதனை - 2
யேகோவாயீரே எல்ரோயீ எல்லாமே
பார்த்துக்கொள்வீர் - 2
நீர் அல்லவோ என் தேவனாம் இயேசுவே
எல்லாமே பார்த்துக்கொள்வீர் - 2
யேகோவா ஷம்மா என் மீட்பரே
இன்றும் என்றுமே கூடவே இருக்கின்றீர் - 2
நீர்தானே என் மேய்ப்பரே
உம்மையன்றி கூடவே யாருமில்லையே - 2
யேகோவா நிசியே என் தேவனே
எல்லாவிதத்திலும் வெற்றித் தருவீர் - 2
நீர் இல்லா ஒரு நாள் வாழ்வாகுமா
எப்படி நான் வாழ்வேனோ – 2