ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 75

உம்மை உயர்த்தி

பல்லவி

உம்மை உயர்த்தி உயர்த்தி

உள்ளம் மகிழுதையா

உம்மை நோக்கிப் பார்த்து

இதயம் துள்ளுதையா

சரணம் 1

கரம் பிடித்து நடத்துகிறீர்

காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி (4) - உம்மை

சரணம் 2

கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்

காயமெல்லாம் ஆற்றுகிறீர்

சரணம் 3

நல்லவரே வல்லவரே

காண்பவரே காப்பவரே

சரணம் 4

இருப்பவரே இருந்தவரே

இனிமேலும் வருபவரே

சரணம் 5

வலுவூட்டும் திரு உணவே

வாழவைக்கும் நல்மருந்தே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு