ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 47

இயேசுவின் நாமம்

பல்லவி

இயேசுவின் நாமம் இன்ப நாமம்

வல்லமையுள்ள நாமம் - அந்த

நாமத்திலே துதி பாடிடுவோம் - 2

கன மகிமையை செலுத்திடுவோம்

சரணம் 1

இயேசுவின் நாமமின்றி

வேறு நாமத்தில் மீட்பில்லையே

அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே

நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே

சரணம் 2

மகிழ்ச்சிக் குரலெழுப்பி

மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்

எக்காளத்தோடும் கைத்தாளதோடும்

நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்

சரணம் 3

தாய் என்னை மறந்தாலும்

அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்

என்னை நினைத்துக் கொள்ள

என் நாமத்தையே

அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார்

சரணம் 4

எக்காளம் முழங்கிடவே

வான மேகங்கள் நடுவினிலே - அவர்

மகிமை யோடும் வான தூதரோடும்

இயேசு இராஜாதி ராஜன் வருவார்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு