ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 43

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

பல்லவி

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

தேடி வந்தீரே

சரணம் 1

என் நேசர் நீர்தானையா

என்னை தேற்றிடும் என தேசையா

சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே

சீக்கிரம் வாருமையா - ஐயா

சரணம் 2

உழையான சேற்றினின்று என்னை

உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்

அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது

அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா

சரணம் 3

ஆபத்து காலத்திலே நல்ல

அநுக்கிரகம் துணையும் நீரே

அன்பே என்றீர் மகளே என்றீர்

மணவாட்டி நீதான் என்றீர்

சரணம் 4

பரிசுத்த ஆவியினால் என்னை

அபிஷேகம் செய்தீரே

பயங்களை நீக்கி பலத்தையே தந்து

பரிசுத்த மகளாக்கினீர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு