ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 309

கண் கலங்காமல் காத்தீரையா

பல்லவி

கண் கலங்காமல் காத்தீரையா

கால் இடராமல் பிடித்தீரையா

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

உம்மோடு கூட நடந்திடுவேன் - 2

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

சரணம் 1

ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட

எடுத்துக் கொண்டீரையா

பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது

மகிமையின் கிரீடம் என்தலைமேல்

உம்மோடு கூட நடந்திடுவேன்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம் (2)

சரணம் 2

நோவா நடந்ததால் உம்கண்களில்

கிருபை கிடைத்ததையா

குடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லி

வெள்ளத்தில் இருந்து காத்தீரையா

உம்மோடு கூட...

சரணம் 3

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட

சினேகிதன் என்றழைத்தீர்

செய்யப் போவதை மறைப்பேனோ என்று

தெரிவித்தீர் உமது திட்டங்களை

சரணம் 4

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா

விண்ணப்பம் கேட்டீரையா

கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று

விடுவித்து மீண்டும் வாழச் செய்தீர்

சரணம் 5

நறுமணம் வீசும் காணிக்கையாய்

பலியாகி அன்பு கூர்ந்தீர்

அதுபோல நானும் அர்ப்பணித்தேன்

அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்

சரணம் 6

ஒளியாம் உம்மோடு நான் நடந்தால்

பிறர் அன்பில் நான் வளர்வேன்

உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு