பல்லவி
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
சரணம் 1
புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
வாழ்நாளெல்லாம்...
சரணம் 2
உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
நல்லவரே வல்லவரே...
காலைதோறும்...
சரணம் 3
துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே...
வாழ்நாளெல்லாம்...
சரணம் 4
அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்
சரணம் 5
செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
சரணம் 6
நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும்
சரணம் 7
ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான்
சரணம் 8
ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல