ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 304

தடுக்கி விழுந்தோரை

பல்லவி

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் (2)

தகப்பனே தந்தையே

உமக்குத் தான் ஆராதனை (2) தடுக்கி...

சரணம் 1

போற்றுதலுக்குரிய பெரியவரே

தூயவர் தூயவரே (2)

எல்லாருக்கும் நன்மை செய்பவரே

இரக்கம் மிகுந்தவரே (2)

உம் நாமம் உயரணுமே

அது உலகெங்கும் பரவணுமே தகப்பனே...

சரணம் 2

உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்

அருகில் இருக்கின்றீர்

கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்

விருப்பம் நிறைவேற்றுவீர்

உம் நாமம்... தகப்பனே...

சரணம் 3

உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே

நோக்கிப் பார்க்கின்றன

ஏற்றவேளையில் உணவளித்து

ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்

உம் நாமம்... தகப்பனே...

சரணம் 4

அன்பு கூரும் எங்களை அரவணைத்து

அதிசயம் செய்கின்றீர்

பற்றிக் கொண்ட யாவரையும் பாதுகாத்து

பரலோகம் கூட்டிச் செல்வீர்

உம் நாமம்... தகப்பனே...

சரணம் 5

உம் அரசின் மகிமை மாட்சிதனை

அறிவித்து மகிழ்ந்திடுவேன்

உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு