ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 29

இடுக்கமான் வாசல் வழியே

பல்லவி

இடுக்கமான வாசல் வழியே

வருந்தி நுழைய முயன்றிடுவோம்

சிலுவை சுமந்து இயேசுவின் பின்

சிரித்த முகமாய் சென்றிடுவோம்

சரணம் 1

வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது

பரலோகம் செல்லும் பாதை குறுகலானது - சிலுவை

சரணம் 2

நாம் காணும் இந்த உலகம்

ஒருநாள் மறைந்திடும்

புது வானம் பூமி நோக்கி

பயணம் செய்கின்றோம்

சரணம் 3

இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்

சிலகாலம் தான் நீடிக்கும்

இணையில்லாத மகிமை

இனிமேல் நமக்குண்டு

சரணம் 4

அழிவுக்கு செல்லும் வாயில்

மிகவும் அகன்றது

பாதாளம் செல்லும் பாதை

மிகவும் விரிந்தது

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு