ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 287

யார் பிரிக்கமுடியும் நாதா

பல்லவி

யார் பிரிக்கமுடியும் நாதா

உந்தன் அன்பிலிருந்து தேவா

சரணம் 1

என் சார்பில் நீர் இருக்க

எனக்கெதிராய் யார் இருப்பார்

மகனையே நீர் தந்தீரய்யா

மற்ற அனைத்தும் தருவீர் ஐயா - உம்

சரணம் 2

தெரிந்துகொண்ட உம் மகன் (மகள்) நான்

குற்றம் சாட்ட யார் இயலும்

நீதிமானாய் ஆக்கிவிட்டீர்

தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே

சரணம் 3

நிகழ்வனவோ வருவனவோ

வழ்வோ சாவோ பிரித்திடுமோ

அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்

அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்

சரணம் 4

வேதனையோ நெருக்கடியோ

சோதனையோ பிரித்திடுமோ

பகைமைகளோ பழிச்சொல்லோ

பொறாமைகளோ பிரித்திடுமோ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு