ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 285

உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா

பல்லவி

உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா

உம்மை நான் புகழ்கின்றேன் தேவா

போற்றி புகழ்கின்றேன்

வாழ்த்தி வணங்குகின்றேன்

சரணம் 1

என்னைக் கைதூக்கிவிட்டீர்

எதிரியின் மேல் வெற்றி தந்தீர்

உதவி தேடி வந்தேன்

உடல் சுகம் தந்தீரய்யா - ஆ... ஆ... ஆ... ஆ...

புகழ்ந்து பாடுவேன்

மகிழ்ந்து கொண்டாடுவேன்

சரணம் 2

மாலைநேரம் அழுகை என்றால்

காலைநேரம் ஆனந்தமே

நொடிப்பொழுது உந்தன் கோபம்

தயவோ வாழ்நாளெல்லாம்

சரணம் 3

சாக்கு துணி களைந்துவிட்டீர்

மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்

புலம்பலை நீக்கிவிட்டீர்

புதுப்பாடல் நாவில் வைத்தீர்

சரணம் 4

என் உள்ளம் புகழ்ந்து பாடும்

இனி மௌனமாய் இருப்பதில்லை

கர்த்தாவே என் தெய்வமே

கரம்பிடித்த மெய் தீபமே

சரணம் 5

மலைபோல் நிற்கச் செய்தீர்

மாவேந்தன் உம் அன்பினால்

நிலைகலங்கி போனேன் ஐயா

நின் முகம் மறைந்தபோது

சரணம் 6

புழுதி உம்மை புகழ முடியுமா?

சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?

என் மீது இரங்கும் ஐயா

எனக்குத் துணையாய் இரும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு