ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 275

என் உள்ளமே

பல்லவி

என் உள்ளமே இளைப்பாறிடு

இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்

சரணம் 1

கால்கள் இடராமல் காப்பாற்றினார்

சாவிலிருந்து விடுவித்தார்

சரணம் 2

நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்

ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்

சரணம் 3

எளிய உள்ளத்தை பாதுகாத்தார்

தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்

சரணம் 4

மன்றாடும் போது செவிசாய்த்தார்

மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்

சரணம் 5

விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்

விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்

சரணம் 6

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி

இரட்சகர் நாமம் உயர்ந்திடுவேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு