ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 254

விடுதலை நாயகன்

பல்லவி

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

சரணம் 1

நான் பாடிப்பாடி மகிழ்வேன் - தினம்

ஆடி ஆடித்துதிப்பேன் - எங்கும்

ஓடி ஓடி சொல்லுவேன்

என் இயேசு ஜீவிக்கிறார்

சரணம் 2

அவர் தேடி ஓடி வந்தார்

என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்

என் பாவம் அனைத்தும் மன்னித்தார்

புது மனிதனாக மாற்றினார்

சரணம் 3

அவர் அன்பின் அபிஷேகத்தால்

என்னை நிரப்பி நடத்துகின்றார்

சாத்தானின் வலிமை வெல்ல

அதிகாரம் எனக்குத் தந்தார்

சரணம் 4

செங்கலைக் கடந்து செல்வேன்

யோர்தானை மிதித்து நடப்பேன்

எரிகோவை சுற்றி வருவேன்

எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு