ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 253

விசுவாசத்தினால்

பல்லவி

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசியே பதறாதே

கலங்காதே திகையாதே விசுவாசியே

கல்வாரி நாயகன் கைவிடாரே

சரணம் 1

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்

பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்

நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை

சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

சரணம் 2

பிறர் வசை கூறி துன்புறுத்தி

இல்லாதது சொல்லும்போது

நீ மகிழ்ந்து களி கூரு

விண் கைமாறுமிகுதியாகும்

சரணம் 3

கொடும் வறுமையின் உழன்றாலும்

கடும் பசியினில் வாடினாலும்

அன்று எலியாவை போஷித்தவர்

இன்று உன் பசி ஆற்றிடாரோ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு