ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 249

வற்றாத நீரூற்று

பல்லவி

வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்

கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்

காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

சரணம் 1

வாழ்க்கால்கள் ஓரம்

நடப்பட்ட மரமாய்

எப்போதும் கனி கொடுப்பாய்

தப்பாமல் கனி கொடுப்பாய்

சரணம் 2

ஓடும் நதி நீ

பாயும் இடத்தில்

உயிரெல்லாம் பிழைத்திடுமே

சுகமாக வாழ்ந்திடுமே

சரணம் 3

பலநாட்டு மக்கள்

உன் நிழல் கண்டு

ஓடி வருவார்கள்

பாடி மகிழ்வார்கள்

சரணம் 4

பஞ்ச காலத்தில்

உன் ஆத்துமாவை

திருப்தியாக்கிடுவார்

தினமும் நடத்திடுவார்

சரணம் 5

கோடைக் காலத்தில்

வறட்சிக் காலத்தில்

அச்சமின்றி இருப்பாய் - நீ

ஆறுதலாய் இருப்பாய்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு