ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 236

முடியாது முடியாது

பல்லவி

முடியாது முடியாது

உம்மைப் பிரிந்து எதையும் செய்ய

முடியாது முடியாது - என்னால் (இயேசையா)

சரணம் 1

திராட்சை செடியே உம் கொடி நான்

உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து

உலகெங்கும் கனி தருவேன்

சரணம் 2

மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்

உமது வார்த்தையால் இந்நாளில் என்னை

உயிர்ப்பியும் என் தெய்வமே

சரணம் 3

குயவன் நீர் களிமண் நான் - உமது

விருப்பம் போல் வனைந்துக் கொண்டு

உலகெங்கும் பயன்படுத்தும்

சரணம் 4

பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்

எதையும் செய்திட பெலணுண்டு

எல்லாம் நான் செய்திடுவேன்

எல்லாம் நான் செய்திடுவேன்

உம் துணையால் உம் கரத்தால்

எல்லாம் நான் செய்திடுவேன் .. இயேசையா

சரணம் 5

பூமியிலே பரதேசி நான் - உமது

வார்த்தையை ஒருபோதும் எனக்கு

மறைத்து விடாதேயும்

சரணம் 6

உம் வழிகள் கற்றுத்தாரும்

இறுதிவரை நான் பற்றிக் கொண்டு

எந்நாளும் கடைபிடிப்பேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு