ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 230

மகிமையின் நம்பிக்கையே

பல்லவி

மகிமையின் நம்பிக்கையே

மாறிடாத என் இயேசையா

உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்

உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து

தூயவர் உம்மை நான் பாடுவேன்

சரணம் 1

ஆத்துமாவின் நங்கூரமே

அழிவில்லா பெட்டகமே

நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற

நிம்மதியின் கன்மைலயே

சரணம் 2

பள்ளத்தாக்கில் நடந்தாலும்

பயமில்லை பாதிப்பில்லை

உம் குரலோ கேட்குதையா

உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

சரணம் 3

நல் மேப்பவரே நம்பிக்கையே

நானும் உந்தன் ஆட்டுக்குட்டி

உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்

உம் தோளில்தான் நானிருப்பேன்

சரணம் 4

பிரகாசிப்பின் பேரொளியே

விடிவெள்ளி நட்சத்திரமே

உம் வசனம் ஏந்திக் கொண்டு

உலகெங்கும் சுடர்விடுவேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு