ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 229

மகிமை உமக்கன்றோ

பல்லவி

மகிமை உமக்கன்றோ

மாட்சிமை உமக்கன்றோ

துதியும் புகழும் ஸ்தோத்திரமும்

தூயவர் உமக்கன்றோ

ஆராதனை - ஆராதனை - என்

ஆன்பர் இயேசுவுக்கே

சரணம் 1

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்

விடுதலை கொடுத்தீர்

இராஜாக்களாக லேவியராக

உமக்கென தெரிந்து கொண்டீர்

சரணம் 2

விழிகாட்டும் தீபம் துணையாளரே

தேற்றும் தெய்வமே

அன்பால் பெலத்தால்

அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

சரணம் 3

எப்போதும் இருக்கின்ற

இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே

உம் நாமம் வாழ்க உம் அரசு வருக

உம் சித்தம் நிறைவேறுக

சரணம் 4

உம் வல்ல செயல்கள்

மிகவும் பெரிய அதிசயமன்றோ

உம் தூய வழிகள் நேர்மையான

சத்திய தீபமன்றோ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு