பல்லவி
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
சரணம் 1
உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
சரணம் 2
நிறைவான பரிசு நீர்தானையா - உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா
சரணம் 3
வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா
சரணம் 4
ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
சரணம் 5
கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
சரணம் 6
போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
சரணம் 7
கருணைக்கண் கொண்டு நோக்குமையா - உந்தன்
கனிமொழியால் என்னைத் தேற்றுமையா
சரணம் 8
திருப்தியாக்கும் என் திருஉணவே
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே