ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 225

போதுமானவரே புதுமையானவரே

பல்லவி

போதுமானவரே புதுமையானவரே

பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே

ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

சரணம் 1

எனக்காக தண்டிக்கப்பட்டீரே

அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்

எனக்காக காயப்பட்டீரே

அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்

- ஆராதனை

சரணம் 2

பாவங்கள் சுமந்ததனால் - நான்

நீதிமானாய் மாற்றப்பட்டேன்

மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய

ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

சரணம் 3

எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்

அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்

எனக்காக அவமானமடைந்து - உம்

மகிமையிலே பங்குபெறச் செய்தீர்

சரணம் 4

சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை

செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர்

சாபங்களை சுமந்து கொண்டதால் - நான்

ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு