ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 223

பொருட்கள் மேல கண்ணு

பல்லவி

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

போச்சய்யா உன் அபிஷேகம்

ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா

அம்போதான் உன் அபிஷேகம்

காத்துக்கொள் காத்துக்கொள்

பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள்

சரணம் 1

பெருமை என்ற வலையில் விழாதே

அது வறுமையைக் கொண்டு வந்திடும்

பணத்திலே மயங்கி விடாதே - உன்னை

பாதாளம் கொண்டு பொய்விடும்

சரணம் 2

அழிந்து போகும் உலகப் பொருட்களால்

நண்பர்களை சம்பாதித்துக் கொள்

நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)

நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்

சரணம் 3

அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் - நீ

அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்

அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை

அநுதினமும் நடத்திச் செல்வாரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு