ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 19

ஆண்டவர் எனக்காய்

பல்லவி

ஆண்டவர் எனக்காய் யாவையும்

செய்து முடிப்பார் அச்சமே

எனக்கில்லை அல்லேலூயா

சரணம் 1

என்னை நடத்தும் இயேசுவினாலே

எதையும் செய்திடுவேன்

அவரது கிருபைக்கு காத்திருந்து

ஆவியில் பெலனடைவேன்

சரணம் 2

வறுமையோ வருத்தமோ

வாட்டிடும் துன்பமோ

எதையும் தாங்கிடுவேன்

அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து

ஆண்டவர் பின் செல்வேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு