ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 187

நல்லதையே நான் சொல்லவும்

பல்லவி

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்

உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா

சரணம் 1

ஆதி முதல் என்னைத் தெரிந்துக் கொண்டீர்

அப்பாவை நம்பி மீட்படைய

ஆவியினாலே தூய்மையாக்கி

ஆதிசயமாய் என்னை நடத்துகிறீர்

அப்பா... நன்றி... நன்றி - 2

சரணம் 2

பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்

கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்

கிருபையினாலே என்னை இரட்சித்தீர்

உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்

சரணம் 3

ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட

ஆழைத்தீரே நன்றி ஐயா

ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்

பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர்

சரணம் 4

துதிக்கும் மகிமையக்கும் பாத்திரரே

பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே

ஞானமும் நன்றியும் வல்லமையும்

என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்

சரணம் 5

ஆவியினாலே பெலப்படணும்

அன்பிலே வேரூன்றி திடம் பெறணும்

அப்பாவின் அன்பின் அகலம் ஆழம்

அறியும் ஆற்றல் நான் பெறணும்

சரணம் 6

எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து

இடைவிடாமல் ஜெபம் செய்யணும்

என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி

இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு