ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 181

தேவனே என் தேவா

பல்லவி

தேவனே என் தேவா

உம்மை நோக்கினேன்

தண்ணீரில்லா நிலம்போல

தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்

சரணம் 1

ஒவ்வொரு நாளும் உம்பிரசன்னம்

ஓடி வருகிறேன்

உம் வல்லமை மகிமை கண்டு

உலகை மறக்கின்றேன்

சரணம் 2

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை

எனக்குப் போதுமே

உதடுகளாலே துதிக்கின்றேன்

உலகை மறக்கின்றேன்

சரணம் 3

படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்

இராச்சாமத்தில் தியானிக்கிறேன்

உம் சிறகுகளின் நிழல்தனிலே

உலகை மறக்கின்றேன்

சரணம் 4

வாழ் நாளெல்லாம் உம்நாமம்

வாழ்த்திப் பாடுவேன்

சுவையான உணவை உண்பதுபோல்

திருப்தி அடைகின்றேன்

சரணம் 5

எனது ஆன்மா தொடர்ந்து உம்மை

பற்றி கொண்டது

உம் வலக்கரமோ என்னை நாளும்

தாங்கிக் கொண்டது

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு