ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 172

தெய்வமே இயேசுவே

பல்லவி

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2

சரணம் 1

உலப் பெருமை இன்பமெல்லாம்

உமக்காய் இழந்தேனையா

உம்மைப் பிரிக்கும் பாவங்களை

இனிமேல் வெறுத்தேனையா

உம் சித்தம் நிறைவேற்றுவேன்

உமக்காய் வாழ்ந்திடுவேன்

சரணம் 2

எதை நான் பேசவேண்டுமென்று

கற்றுத் தாருதையா

எவ்வழி நடக்க வேண்டுமென்று

பாதை காட்டுமையா

ஒளியான தீபமே

வழிகாட்டும் தெய்வமே

சரணம் 3

உலகம் வெறுத்து பேசட்டுமே

உம்மில் மகிழ்ந்திருப்பேன்

காரணமின்றி பகைக்கட்டுமே

கர்த்தரைத் துதித்திடுவேன்

சிலுவை சுமந்தவரை

சிந்தையில் நிறுத்துகிறேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு