ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 160

தளர்ந்து போன கைகளை

பல்லவி

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

சரணம் 1

உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்

அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார்

விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்

ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

சரணம் 2

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி

தீட்டுப்படடோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை

மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்

சரணம் 3

ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி

சீயோன் வருவார்கள்

நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்

சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

சரணம் 4

பார்வையற்றோர் கண்களெல்லாம்

பார்வை அடையும் செவிகள் கேட்கும்

ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள்

ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்

சரணம் 5

வறண்ட நிலம் நீரூற்றால்

நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்

நரிகள் தங்கும் வளைகள் எங்கும்

கோரை முளைக்கும்

நாணுலும் புல்லும் நிலைத்து நிற்கும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு