பல்லவி
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு - 2
சரணம் 1
பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு .. இன்று
சரணம் 2
பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு - எனவே
சரணம் 3
நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
சரணம் 4
நேசக்கொடி என்மேலே பறக்குதையா... என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
சரணம் 5
கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு - என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு