ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 127

கட்டப்பட்ட மனிதரெல்லாம்

பல்லவி

கட்டப்பட்ட மனிதரெல்லாம்

கட்டவிழ்க்கப்பட வேண்டும்

காயப்பட்ட மனிதரெல்லாம்

கல்வாரி வர வேண்டும்

கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா......தேவா

சரணம் 1

எழுப்புதல் தீ பரவட்டுமே

எங்கும் பற்றி எரியட்டுமே

சரணம் 2

அறியாமை இருள் விலகி

அதிசய தேவளை காண வேண்டும்

சரணம் 3

பாவங்கள் சாபங்கள்

பாரத தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள்

சரணம் 4

இமயம் முதல் குமரி வரை - என்

இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

சரணம் 5

உண்மையான ஊழியர்கள்

உலகம் எங்கும் செல்ல வேண்டும்

சரணம் 6

சபைகளெல்லாம் தூய்மையாகி

சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு