ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 118

என்னைக் காக்கவும் பரலோகம்

பல்லவி

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்

எனக்காய் யுத்தம் செய்து

இரட்சித்து வழிநடத்தி

என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

சரணம் 1

ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்

ஏழு வழியாக துரத்திடுவீர்

சரணம் 2

வறட்சி காலங்களில் திருப்தியாக்கி

எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

சரணம் 3

போரிட கைகளுக்கு பயிற்சி தந்து

விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

சரணம் 4

நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க

கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே

சரணம் 5

காலை தோறும் என்னை எழுப்புகிறீர்

கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்

சரணம் 6

சத்தியமே உம்மை அறிந்து கொள்ள

புத்தியை தந்தீரே நன்றி ஐயா

சரணம் 7

புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்

சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்

சரணம் 8

வற்றாத நீரூற்றாய் ஓடச் செய்தீர்

வளமான தோட்டமாக மாற்றுகிறீர்

சரணம் 9

என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்

ஒரு நாளும் விலகாது என்றுரைத்தீர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு