பல்லவி
பாரில் ஏசு பாலனாக
பாவம் போக்க வந்தாரே.
அனுபல்லவி
பாடி மகிழ்வோம் பரமதந்தையை
பாவிகளுக்குப் பாக்கியம் தந்தாரே.
— பாரில்
1
ஆதாம் ஏவை செய்த பாவம்
அகற்ற வந்தா ரண்ணல் ஏசு
அற்புதமாய் கன்னி மரியாளிடம்
அவதரித்தார் ஆனந்தமே.
— பாரில்
2
பெத்லகேமின் சத்திரத்தில்
நித்தியனின் புத்திரனார்
மெத்த ஏழைக்கோலம் கொண்டார்
பக்தியுடன் பாடித் துதிப்போம்.
— பாரில்
3
விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றார் என்று
தூதர்களோ, பாக்கியவான்களோ,
ஏகமாய் பாடிப் போற்றித் துதியுங்கள்.
— பாரில்
4
ஆதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்து,
நீர் மானிடனாகி இந்நாளில்
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்தரிப்போம்.
— பாரில்