பவனி செல்கின்றார் ராஜா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா.
அவனிதனிலே மறுமேலேறி
ஆனந்தம், பரமானந்தம், - பவனி
1
எருசலேமின் பதியே, - சூர்
கரிசனையுள்ள நிதியே,
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே.
- பவனி
2
பன்னிரண்டு சீஷர் சென்று - நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
நன்னயஞ்சேர் மனுவின் சேனை
நாதகீதம் ஓத
- பவனி
3
குருத்தாலைகள் பிடிக்க, - பாலர்
கும்பல் கும்பலாகவே நடக்க,
பெருத்த தொனியாய், ஓசன்னாவென்று
போற்று மனம் தேற்ற.
-பவனி