அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 525

வீராதி வீரர் ஏசு

1

வீராதி வீரர் ஏசு சேனை நாங்கள்,

சேனை நாங்கள்; ஏசுவின் சேனை நாங்கள்.

2

திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம்,

திரிந்து சொல்வோம் ; அதை அறிந்து சொல்வோம்.

3

அறிவீன மென்னும் நாட்டை அடமாக்குவோம்

அடமாக்குவோம்; ஞானமதால் தாக்குவோம்.

4

சிலுவைக் கொடியைச் சேர்த் தேடிப் பிடிப்போம்,

தேடிப்பிடிப்போம்; அன்பு கூறிப் பிடிப்போம்.

5

ரட்சணிய சீராவுடன் நீதிக் கவசம்,

நீதிக் கவசம் ; கையாடுவோம் வசம்.

6

விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்,

மேலுயர்த்துவோம்; அதை மேலுயர்த்துவேம்.

7

பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்,

பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு