அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 519

சிலுவைக் கொடி பிடித்து

சிலுவைக் கொடி பிடித்து

சிறுவரே நாம் சென்றிடுவோம்

1

உலகினில் எங்கும் சென்று

ஒசன்னா கீதம் பாடி

உழியம் நாம் செய்திடுவோம்

ஊக்கமாக ஏசுவுக்கு.- சிலுவை

2

கெட்டோரை ஏசுவிடம்

கூட்டியே சேர்த்திடுவோம்

மட்டில்லா ஏசு அன்பை

மானிடர்க்கு பகிர்ந்திடுவோம்.- சிலுவை

3

சோதனைகள் வந்திடினும்

சோராமல் முயன்றிடுவோம்

நாதனேசு கைவிடாமல்

நம்மை நித்தம் தாங்குவாரே.- சிலுவை

4

நன்மை நிறை ஏசுவின் கை

நாம் செல்லும் பாதைக் காட்டும்

நம்பியே நாம் ஏகுவோமே

நமது பலம் ஏசுதானே.- சிலுவை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு